சங்கராபாளையம் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி

சங்கராபாளையம் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி
X

வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் குருசாமி.

சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் குருசாமி வெற்றி பெற்றார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள சங்கராப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், ஐந்து சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டது. முதல் மூன்று சுற்றுகளில் அதிமுக ஆதரவில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நடராஜன் முன்னிலை வகித்தார்.

இதைத் தொடர்ந்து, நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்றில் திமுக ஆதரவில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட குருசாமி முன்னிலைப் பெற்றார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 1073 வாக்குகள் பெற்று, 299 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் குருசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். திமுக வேட்பாளர் நடராஜன் 774 வாக்குகளும், சித்தன் 245 வாக்குகளும், சக்திவேல் 118 வாக்குகளும் பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!