/* */

பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை : ஆயிரக்கணக்கான வாழை சேதம்

பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததில் தோட்டத்தில் வெள்ளம் புகுந்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை : ஆயிரக்கணக்கான வாழை சேதம்
X

பர்கூர் மலைப்பகுதியில் மழையில் சேதமடைந்த வாழைகள்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. அதன்படி பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மழை தூறியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. நள்ளிரவு 2 மணி வரை இடி-மின்னலுடன் கனமழையாக கொட்டித்தீர்த்தது.

இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. காட்டாற்று வெள்ளம் ெபருக்கெடுத்து ஓடியதில் மழைநீர் செலம்பூர் அம்மன் கோவில் ஓடை வழியாக சென்று எண்ணமங்கலம் ஏரியில் கலந்தது. இதில், எண்ணமங்கலம் ஏரி நிரம்பியது. செலம்பூர் அம்மன் கோவில் ஓடையில் முறையாக தூர்வாரப்படாததால் கரையில் இருந்து வெளியேறிய மழை வெள்ளம், அருகே உள்ள வாழை தோட்டத்துக்குள்ளும் புகுந்தது. இதனால் வாழைகள் தண்ணீரில் மூழ்கியும், அடித்து செல்லப்பட்டும், சாய்ந்தும் சேதமடைந்தன.

Updated On: 26 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்