அந்தியூர் அருகே கல்குவாரியை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூர் அருகே கல்குவாரியை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்
X

வெள்ளித்திருப்பூர் கொமரயனூர் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்தியூர் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரியை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் கொமரயனூர் சாலையில் கூப்புகாட்டு பிரிவில் கொமரயனூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டுவருகிறது.

இங்கு பாறைகளுக்கு வெடி வைக்கும் போது வீடுகள் மற்றும் விவசாய நிலத்தில் கற்கள் விழுவதாகவும், பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனை கண்டித்து இன்று மதியம் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில் வெள்ளித்திருப்பூர் உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து சட்டமன்ற உறுப்பினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைதொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் வெள்ளித்திருப்பூர் கொமரயனூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future