அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர். 

அந்தியூரில், 10. 5 இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழக அரசு வழங்கிய 10. 5 சதவீத இட ஒதுக்கீட்டை, மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை கண்டித்து, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அந்தியூர் நகர செயலாளர் மாதேஷ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்டிஆர் கோபால், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 10. 5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை மீண்டும் வழங்க வேண்டுமென்று கூறினார்.

மேலும், நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமூகத்தை இழிவு செய்துள்ளதாக்கூறி, அதை கண்டித்தும் நடிகர் சூர்யா நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என கூறியும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்