அந்தியூர் வாரச்சந்தையில் எம்எல்ஏ ஆய்வு

அந்தியூர் வாரச்சந்தையில் எம்எல்ஏ ஆய்வு
X

வியாபாரிகளிடம் குறைகளை கேட்கும் எம்எல்ஏ வெங்கடாசலம். 

அந்தியூர் வாரச்சந்தையை எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் இன்று ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று காய்கறிகள் விற்பனை நடைபெறும். இதற்காக அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களுடைய தோட்டத்தில் விளைந்த காய்களை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.




இந்நிலையில் இன்று வாரச்சந்தையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ‌.ஜி.வெங்கடாசலம் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்தார். உடன் அந்தியூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!