கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ மற்றும் பேரிடர் கண்காணிப்பு அலுவலர்
கெட்டிசமுத்திரம் ஏரியில் ஆய்வு மேற்கொள்ளும் எம்எல்ஏ வெங்கடாசலம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை மற்றும் எண்ணமங்கலம் ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீரால், கெட்டிசமுத்திரம் ஏரி நேற்று காலை நிரம்பி, உபரி நீர் அந்தியூர் பெரிய ஏரிக்கு சென்று வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாச்சலம் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு பேரிடர் மேலாண்மைக்குழு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் பிரபாகரன் ஆகியோர், கொட்டும் மழையில் கெட்டிசமுத்திரம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
அப்போது, அந்தியூர் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறும் பாதைகளை, பொக்லைன் இயந்திரம் மூலம் அடைப்புகளை அகற்ற வேண்டும் எனவும், எக்காரனம் கொண்டும் மழை நீர் வடிகால் வசதி இன்றியோ, வாய்க்கால் அடைப்புகளால் நீர் தேங்கி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடக் கூடாது என்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பிரபாகர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கெட்டிசமுத்திரம் ஏரியினை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ மற்றும் பேரிடர் கண்காணிப்பு அலுவலர்
காளிங்கராயன் அணைக்கட்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர்
இதேபோல் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பவானி வட்டாரத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர். பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டம், பவானி காளிங்கராயன் அணைக்கட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அணைகளின் நீர் கொள்ளளவு, நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu