மதுபோதையில் சாக்கடையில் விழுந்து தொழிலாளி பரிதாப பலி

மதுபோதையில் சாக்கடையில் விழுந்து தொழிலாளி பரிதாப பலி
X

பலியான ராஜு.

அந்தியூர் அருகே மதுபோதையில் சாக்கடையில் விழுந்து கூலித் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சாக்கடையில் ஒருவர் விழுந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்த நபரை சாக்கடையிலிருந்து மேலே தூக்கி பரிசோதனை செய்வதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் இறந்து போனவர் சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜூ வயது 63 என்பதும் அவருக்கு இரண்டு குழந்தைகள், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராஜுவின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்