அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது
X

விஸ்வநாதன்.

குருவரெட்டியூரில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் அருகே ஓலையூரை சேர்ந்தவர் அபிமன்னன் (வயது 35) தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தினை வீட்டு முன் நிறுத்தியிருந்தார். கடந்த, 24ம் தேதி காணவில்லை. அவர் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவு அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். இதில் வெள்ளித்திருப்பூர் குரும்பபாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 44) திருடியது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து இருசக்கர வாகனத்தை மீட்டனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரம் மார்க்கெட்டில் பருத்திக்கு உச்ச விலை!..ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம்!