அந்தியூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

அந்தியூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
X

கைது செய்யப்பட்ட பொன்னுச்சாமி.

அண்ணாமடுவு பஸ் நிறுத்தத்தில் வெள்ளைத்தாளில் நம்பரை எழுதி லாட்டரி என ஏமாற்றி விற்றவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சித்திரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர், இன்று காலை அண்ணாமடுவு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு, வெள்ளைத்தாளில் நம்பரை எழுதி லாட்டரி சீட்டு என பொதுமக்களிடம் ஏமாற்றி விற்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, தவிட்டுபாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரிடமும், லாட்டரி சீட்டு என்று கூறி ஏமாற்றி விற்பனை செய்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன்பின் அப்பகுதிக்குச் சென்ற அந்தியூர் போலீசார் பொன்னுசாமியை கைது செய்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த அந்தியூர் போலீசார், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னுச்சாமியை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!