பர்கூர் மலைப்பகுதியில் மீண்டும் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே திடீர் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் நான்காவது முறையாக மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பர்கூர் மலைப்பாதைகளில் வரும் வாகனங்கள் போலீசார் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை செல்லும் வழியில் செட்டிநொடி என்ற இடத்தில் இன்று அதிகாலை மண்சரிவு ஏற்பட்டது.கடந்த திங்கட்கிழமை இதே பகுதியில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தற்போது இன்று மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு மீண்டும் ராட்சத பாறைகள் அங்காங்கே உருண்டு விழுந்ததால் பர்கூர் வாழ்மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.மண்சரிவு காரணமாக பர்கூர் மலைப்பகுதிக்கு செல்லும் வாகனங்கள் வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடியில் இருந்து திருப்பி அனுப்பபட்டு வருகிறது. இதேபோல் தாமரைக்கரையிலிருந்து அந்தியூர் வரும் வாகனங்களும் திருப்பி அனுப்ப்பட்டு வருகிறது.
தொடர் மழைப்பொழிவு காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் கனகர வாகனங்கள் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் இன்று மெகா தடுப்பூசி முகாம் காரணமாக பர்கூர் ஊராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்த வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் சோதனைச்சாவடியில் இருந்து திரும்பி அனுப்பப்பட்டனர். முதற்கட்டமாக வனத்துறை ஊழியர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நான்காவது முறையாக மண்சரிவு காரணமாக தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu