முழு கொள்ளளவை எட்டிய கெட்டிசமுத்திரம் ஏரி: உபரி நீர் வெளியேற்றம்

முழு கொள்ளளவை எட்டிய கெட்டிசமுத்திரம் ஏரி: உபரி நீர் வெளியேற்றம்

கெட்டிசமுத்திரம் ஏரி.

அந்தியூர் மலைப் பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக, கெட்டிசமுத்திரம் ஏரியின் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறுகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வரட்டுப்பள்ளம் அணையில் நீர் பிடிப்பு பகுதிகளும், எண்ணமங்கலம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியிலும் கனத்த மழை கொட்டியது.

இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணை மற்றும் எண்ணமங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் அதிகப்படியான உபரி நீர், கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.

கெட்டிசமுத்திரம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறுவதை படத்தில் காணலாம்.

தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால், இன்று காலை 11 மணிக்கு கெட்டிசமுத்திரம் ஏரியின் முழு கொள்ளளவான 17 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அந்தியூர் ஏரிக்கு சென்றடைகிறது. இதனால் ஏரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story