கெட்டிசமுத்திரம் ஏரியில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணி தீவிரம்
விபத்துக்குள்ளான லாரி.
ஈரோடு மாவட்டம் அருகே உள்ள சிங்கம்பேட்டை பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதிக்கு சாலிட் பிளாக் கற்களை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் சிவகுமார் ஒட்டி வந்தார். கடந்த சில நாட்களாக பர்கூர் மலைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி பர்கூர் மலைப் பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாததால் சாலிட் பிளாக் கற்களை ஏற்றி வந்த லாரி வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டது.
பின்னர் லாரி ஓட்டுநர் சிவகுமார் லாரியை நிறுத்திவிட்டு வேறு வாகனம் மூலம் தனது வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் லாரியில் இருந்த உதவியாளர் அஜ்மல் என்பவர் இரவு லாரி எடுத்துக் கொண்டு மீண்டும் அந்தியூர் சத்தியமங்கலம் வழியாக கொள்ளேகால் செல்ல முடிவு செய்து லாரியை ஓட்டி வந்தார். அந்தியூர் பர்கூர் ரோட்டில் கெட்டிசமுத்திரம் ஏரி என்ற பகுதியில் லாரி வரும் பொழுது ஏரியின் ஓரத்தில் கரையில் லாரி சாய்ந்தது. லாரியின் கிளீனர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்லைன் இயந்திரம் மற்றும் கிரேன் இயந்திரங்கள் கொண்டு லாரியை பத்திரமாக மீட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu