அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்

அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
X

சேதமடைந்த தடுப்பணையை ஆய்வு செய்த எம்எல்ஏ. 

நள்ளிரவு பெய்த கனமழையால் தடுப்பணை உடைந்து தண்ணீர் விவசாய தோட்டத்திற்குள் புகுந்தது.

ஈரோடு மாநகர பகுதியில் நள்ளிரவு 2 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. இதேபோல் அம்மா பேட்டை சுற்று வட்டார பகுதிகளான சிங்கம்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சித்தார், குருவரெட்டியூர், ஜர்த்ர்தல், சென்னம்பட்டி, முரளி, சனிசந்தை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. சென்னம்பட்டி வனப்பகுதியை ஒட்டியவாறு சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மலைப் பகுதியில் மழை பெய்தால் இந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கி பெரிய ஏரிக்கு செல்லும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.


இந்நிலை லையில் நள்ளிரவு பெய்த பலத்த மழையால் வனப்பகுதியில் மன்னாதன்குட்டையை ஒட்டியுள்ள பச்சமுத்து என்பவரது தோட்டம் அருகில் தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் அருகில் எலுமிச்சை,வாழை,சோள, தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது. சுமார் 20 ஏக்கர் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் பயிர்கள் வேருடன் சாய்ந்து சேதமடைந்தது. தடுப்பணை உடைந்து அருகிலுள்ள சிமெண்ட் கல் தயாரிக்கும் கம்பெனிக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் எந்திரங்கள் மூழ்கி பழுதடைந்தன. மேலும் வனப் பகுதியிலிருந்து செல்லும் தார் ரோடுகள் முற்றிலும் பெயர்ந்து சேதமானது. நள்ளிரவு 1 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை அதிகாலை 5 மணி வரை செய்து கொண்டே இருந்தது. மன்னாதன் குட்டை ஏரி உடைந்த தகவலறிந்து அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ‌ உடனடியாக மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.




Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!