அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இடி-மின்னலுடன் பெய்த கன மழை எம்எல்ஏ ஆய்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது; எம்எல்ஏ ஆய்வு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நகலூர், பெருமாபாளையம், பிரம்மதேசம், ஓசைப்பட்டி, வேம்பத்தி, கீழ்வாணி, ஆப்பக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது.மழை பெய்தபோது வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரோடுகளில் மழை வெள்ளம் ஆறுபோல் ஓடியது. தவுட்டுப்பாளையத்தில் தாழ்வான பகுதிகளில் கடைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. அந்தியூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நேருநகரில் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் நீர் புகுந்தது இந்த தகவல் அறிந்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களை தீயணைப்புத்துறையினர் , காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மீட்டு அந்தியூரில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil