அந்தியூர் அருகே குட்கா, மது விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது

அந்தியூர் அருகே குட்கா, மது விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது
X

 சிரில் ஜோசப்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில்தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் போலீசார் அதிரடி காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை அந்தியூர் அருகே உள்ள நகலூர் பகுதியில் உள்ள கடைகளில் அந்தியூர் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிரில் ஜோசப் என்பவரின் மளிகைக் கடையில் சோதனை நடத்தியபோது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மது இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, 630 குட்கா போதைப் பொருள் பாக்கெட்டுகள் மற்றும் 55 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிரில் ஜோசப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story