அந்தியூரில் நிலக்கடலை ரூ.7.46 லட்சத்துக்கு ஏலம்

அந்தியூரில் நிலக்கடலை ரூ.7.46 லட்சத்துக்கு ஏலம்
X
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், வெள்ளித்திருப்பூர், அத்தாணி, ஆப்பக்கூடல், எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நிலக்கடலையை கொண்டு வந்திருந்தனர்.

இதில் நிலக்கடலை (பச்சை) 54 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) ரூ.2 ஆயிரத்து 419 முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை ஏலம் போனது. நிலக்கடலை (காய்ந்தது) 337மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.

குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 717 முதல். ரூ.6 ஆயிரத்து 727 வரை என மொத்தம் ரூ.7 லட்சத்து 46 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!