அந்தியூர் அருகே கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை

அந்தியூர் அருகே கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை

கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சிறுமி

பெற்றோர்கள் உறவினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள நகலூர் குண்டுபுளியமரம் பகுதியை சேர்ந்த செங்கல் சூளை கூலித்தொழிலாளி முனுசாமி. இவரது மூத்த மகள் மகள் இந்துமதி இவர் 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்து வந்தாக கூறப்படுகிறது. இந்துமதிக்கு கடந்த 6 மாதங்களாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டதால், அதற்கான சிகிச்சை பெற்று வந்தாராம்.நேற்று இரவு வழக்க்போல வீட்டினுள் தூங்கச் சென்ற இந்துமதியை அதிகாலையில் காணவில்லை. பெற்றோர்கள் உறவினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நகலூர் செல்லும் சாலையில் சாமியார் தோட்டத்துக் கிணற்றில் விழுந்து இறந்து கிடப்பதாக அப்பகுதியில் சென்ரு பார்த்தவர்கள் பெற்றோருக்கு தகவல் கூறியுள்ளனர். இத்தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story