வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதால் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதால் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
X

பட்டாசு வெடித்து கொண்டாடிய கம்யூனிஸ்ட் கட்சியினர். 

அந்தியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில், விவசாயிகள் மற்றும் கட்சியினர் பல கட்டப் போராட்டங்களை நடத்தினார். இந்நிலையில், மூன்று விவசாய சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் அறிவித்தார்.

இதையடுத்து, இன்று மாலை, ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம் மார்க்கெட் அருகிலும், அரசு மருத்துவமனை அருகிலும், பேருந்து நிலையம் அருகிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு பட்டாசு வெடித்து கொண்டாட்டம் கொண்டாடினர். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, தாலுகா செயலாளர் ஆர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ் வி மாரிமுத்து, தாலுக்கா கமிட்டி உறுப்பினர்கள் பழனிச்சாமி, தியாகராஜன், செபஸ்தியான், கிளைச் செயலாளர் குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!