பர்கூரில் காட்டு பன்றியை அடித்துக் கொன்ற விவசாயிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

பர்கூரில் காட்டு பன்றியை அடித்துக் கொன்ற விவசாயிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
X

அடித்துக்கொல்லப்பட்ட காட்டுப்பன்றியுடன் விவசாயி மற்றும் வனத்துறையினர்.

அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் தோட்டத்தில் புகுந்த காட்டு பன்றியை கட்டையால் அடித்துக் கொன்ற விவசாயிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் அடுத்த ஊசிமலையைச் சேர்ந்த பொன்னாண் (வயது 58). இவர் விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு பன்றியை கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார்.

தகவலறிந்த தட்டகரை வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று இருந்த காட்டுப் பன்றியைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காட்டுப் பன்றியைக் கொன்ற குற்றத்திற்காக பொண்ணானுக்கு இருபது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future