அந்தியூரில் சிறுமியை கட்டாய திருமணம் செய்த டிரைவர் கைது

அந்தியூரில் சிறுமியை கட்டாய திருமணம் செய்த டிரைவர் கைது
X

கைது செய்யப்பட மணிகண்டன்.

குச்சலூரில் 10 ம் வகுப்பு முடித்த மாணவியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த டிரைவரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்தனர்.

குச்சலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியை காணவில்லை. பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியை சேர்ந்த டிரைவரான மணிகண்டன் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார். இதன்பேரில் குழந்தை திருமணம் தடுப்புச்சட்டம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மணிகண்டனை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!