அந்தியூர் பகுதியில் நீர்நிலைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ

அந்தியூர் பகுதியில் நீர்நிலைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ
X

ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மற்றும் எம்எல்ஏ. 

வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி, கெட்டி சமுத்திரம் ஏரி ஆகியவை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் அந்தியூர் ஏரிக்கு சென்று கொண்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை எண்ணமங்கலம் எரி கெட்டி சமுத்திரம் ஏரி ஆகியவை அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் அந்தியூர் பெரிய ஏரிக்கு சென்று கொண்டுள்ளது. அந்தியூர் பெரிய ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளதால் அதன் உபரி நீர் வெளியேறும் பகுதிகளான பெரியார் நகர், ஏ எஸ் எம் காலனி, அண்ணா மடுவு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகாமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் அவர் கெட்டி சமுத்திரம் ஏரி, வரட்டுப்பள்ளம் அணை ஆகியவை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், கோபி கோட்டாட்சியர் பழனிதேவி, பவானி டிஎஸ்பி கார்த்திகேயன், அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தமிழ் பரத், அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!