அந்தியூரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மது பாட்டில்களை அழிப்பு
ஈரோடு மாவட்டம், அந்தியூர் தொகுதிக்குட்பட்ட வெள்ளித்திருப்பூர், பர்கூர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஊரடங்கு காலத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, பர்கூர் காவல் நிலையத்தில் 9 வழக்குகளும், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் 7 வழக்குகளும் ,அந்தியூர் காவல் நிலையத்தில் 9 வழக்குகளும் பதியப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் பர்கூரில் 1721 மதுபாட்டில்களும், அம்மாபேட்டையில் 1,026 மதுபாட்டில்களும், வெள்ளித்திருப்பூரில் 558 மதுபாட்டில்களும், அந்தியூரில் 138 மதுபாட்டிகள் என மொத்தம் 3443 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட 3443 மது பாட்டில்களை இன்று அந்தியூர் பெரிய ஏரி பகுதியில் கோபி கலால் வட்டாட்சியர் ஷீலா முன்னிலையில், அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில், பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பொன்னையா ஆகியோர் தலைமையில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அழிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu