கீழ்வாணியில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்.

கீழ்வாணியில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்.
X

கீழ்வாணியில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் 

கீழ்வாணியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடை வளாகத்தில் கால்நடை துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடைத்துறை உதவி இயக்குனர் அய்யசாமி தலைமை வகித்தார்.

கால்நடை உதவி மருத்துவர்கள் மோகனசுந்தர்ராஜ் , ஜெயவேல், கால்நடை ஆய்வாளர் சித்தன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் செந்தில்அரசு , செம்பன் ஆகியோர் பங்கேற்றனர், இதனையடுத்து, சிறந்த கால்நடைகளுக்கு கீழ்வாணி ஊராட்சி‌மன்ற தலைவர் செல்வி கலந்து கொண்டு பரிசுளை வழங்கினார்.


முகாமில், கால்நடைகளுக்கு கருவூட்டல்,சினை பரிசோதனை, தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், சிறிய அறுவை சிகிச்சை,கால்நடைகள் ஆண்மை நீக்கம் செய்தல் ஆகியவை நடைபெற்றது. இதில் பிரசவிக்கமுடியாமல் அவதிப்பட்ட வெள்ளாடுக்கு கால்நடை உதவி மருத்துவர் மோகனசுந்தர்ராஜ் சிகிச்சை அளித்ததில் அந்த வெள்ளாடு 3 குட்டிகளை ஈன்றது.

மேலும் இந்த சிறப்பு முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags

Next Story