பூதப்பாடியில் ரூ.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

பூதப்பாடியில் ரூ.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
X

பைல் படம்.

அம்மாபேட்டை பூதப்பாடி ஒழுங்கு விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், மேட்டூர், கொளத்தூர் மற்றும் அந்தியூர், அம்மாபேட்டை, பவானி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் 866 மூட்டை பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தார்

இதில் பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சவிலையாக ரூ.6 ஆயிரத்து 819-க்கும், அதிக பட்சமாக ரூ.8 ஆயிரத்து 69-க்கும் ஏலம் போனது. மொத்தம் 18 லட்சத்து 12 ஆயிரத்து 728 ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது. கோவை, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர் வியாபாரிகள் பருத்தியை வாங்கிச் சென்றார்கள்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி