கொரோனா விதிமீறல்: அந்தியூரில் தனியார் மருத்துவமனைக்கு சீல்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனைக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், ஒருசில தனியார் மருத்துவமனைகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, அந்தியூர் வட்டாட்சியர் வீரலட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர் அடங்கிய குழு அந்தியூர் பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அந்தியூர் - பவானி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் அளவுக்கதிகமாக நோயாளிகளை மருத்துவமனைக்குள் அனுமதித்தது தெரிய வந்தது. அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை; பலரும் முகக்கவசம் அணியவில்லை.

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றாமல் இருந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜசேகர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்..

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!