அந்தியூரில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
செங்கல் சூளையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வடமாநில பெண்.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பரவலாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், விடுபட்டோருக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்தியூரை அடுத்துள்ள சின்னத்தம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் 7 குழுக்களாக கிராமங்கள்தோறும் சென்று செங்கல் சூளைகளில் தங்கிப் பணியாற்றி வரும் 18 வயதுக்கு மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.சின்னதம்பிபாளையம், நகலூர், புதுமஞ்சநாயக்கனூர், காந்திநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு நேரில் சென்ற மருத்துவக் குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். மேலும், முகாம்களுக்கு வர இயலாத வயதானவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu