கொரோனா பரவல் : கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவீரம்

கொரோனா பரவல் : கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவீரம்
X

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, பேரூராட்சி பகுதிகளில் தீயணைப்பு துறை வாகனத்தின் மூலம், கிருமிநாசினி தெளிக்கும் பணி மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில், இன்று காலை பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி தலைமையில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேசுராஜ் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உதவியுடன் அந்தியூர் பஸ் நிலையம், ரவுண்டானா, பர்கூர் சாலை, சத்தி ரோடு ஆகிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. மேலும், இப்பணி பேரூராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறும் என அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்