அந்தியூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசாருக்கு கொரோனா

அந்தியூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசாருக்கு கொரோனா
X

பைல் படம்.

அந்தியூர், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் 4 கட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றக்கூடிய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 போலீசாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் அவர்கள் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டும் அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு ஆய்வுக்கு சென்று வந்தார். இதனால் அவரும் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 7 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் வசித்த பகுதியில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி அடித்தும், பிளிச்சீங் பவுடர் தெளித்தும் சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!