அந்தியூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

அந்தியூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
X

அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.

அந்தியூர் தவிட்டுப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை, வட்டாரப் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில், அந்தியூர் மற்றும் அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள 150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம், கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை செய்து, ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்றும், மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சிகள் சமூக நலத்துறை, அங்கன்வாடி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!