அந்தியூர் தொகுதிக்குட்பட்ட இரண்டு ஊராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்

அந்தியூர் தொகுதிக்குட்பட்ட இரண்டு ஊராட்சிகளில்  வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்
X

வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ வெங்கடாசலம். 

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரண்டு ஊராட்சிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வளர்ச்சி திட்ட பணிகளை குறித்து நாள்தோறும் ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து வருகிறார். இதனைத்தொடர்ந்து சின்னதம்பிபாளையம் மற்றும் வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட 6 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிமெண்ட் கான்கிரீட் தளத்தை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மருத்துவ மைதானத்தில் மிளிரும் கார்டியாக் கான்கிளேவ் மாநாடு..!