மாடு வரத்து அதிகம்; விலை குறைவு... அந்தியூர் சந்தை வியாபாரிகள் ஏமாற்றம்

மாடு வரத்து அதிகம்; விலை குறைவு...   அந்தியூர் சந்தை வியாபாரிகள் ஏமாற்றம்
X
அந்தியூர் மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து அதிகமாக இருந்த போதும், குறைந்த விலையிலேயே விற்பனையானதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், வாரந்தோறும் சனி, ஞாயிறுக்கிழமைகளில் கால்நடை சந்தைகளும் திங்கட்கிழமை மளிகை, காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரவு நேரங்களில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் இன்று அந்தியூர் மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிக அளவில் வந்து உள்ளது.

நாளை முழு ஊரடங்கு என்பதால், இன்றைக்கே பெரும்பாலான மாடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தன. ஆனால் கடந்த வாரத்தை காட்டிலும் மாடுகளின் விலை 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை குறைவான விலையிலேயே விற்பனையானது. இதனால் அதிகளவில் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த வியாபாரிகள் விலை குறைவு காரணமாக மிகவும் வேதனை அடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!