தொடர் மழையால் அந்தியூர் பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிப்பு

தொடர் மழையால் அந்தியூர் பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிப்பு
X
அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் , மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளான சின்னத்தம்பி பாளையம், முனியப்பன் பாளையம், நகலூர், தாசளியூர், தோப்பூர், புது மேட்டூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த செங்கல் சூளையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் வந்து தங்கி, செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 20 நாட்களாக அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், செங்கல் தொழிலாளர்கள் செங்கல் அறுக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது

இதனால் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், மழையால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் மழை நின்று, பழைய நிலைமை திரும்பினால் மட்டுமே இங்கு தொடருது செங்கல் அறுக்கும் பணியை தொடர முடியும் எனவும் தெரிவித்தனர். இதுபோன்ற சூழ்நிலை நிலவும் காலங்களில், தங்களுக்கு செங்கல் உற்பத்தியாளர்கள் உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil