பிரம்மதேசம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பானுமதி தேர்வு

பிரம்மதேசம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பானுமதி தேர்வு
X

வெற்றி பெற்ற பானுமதி அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அந்தியூர் பிரம்மதேசம் கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பானுமதி வெற்றி பெற்றார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், சின்ன பருவாச்சியை சேர்ந்த பானுமதி என்பவர் போட்டியிட்டார்.

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், 197 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் வைதேகியை விட 52 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பானுமதியிடம் வழங்கினார். வெற்றி பெற்ற பானுமதி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!