அந்தியூர் அருகே போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

அந்தியூர் அருகே போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது
X

கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி.

அந்தியூர் அருகே ஒலகடம் பகுதியைச் சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திய சிறுவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

அந்தியூர் பகுதியைச் சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குள்ளநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி 17 வெள்ளித்திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சத்தியமூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர் திருத்தப்பள்ளியில் அடைக்க போலீசார் தயாராகி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!