அந்தியூரில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு போனஸ்: அமைச்சர் வழங்கல்

அந்தியூரில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு  போனஸ்: அமைச்சர் வழங்கல்
X

அந்தியூரில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி தீபாவளி போனஸ் வழங்கினார்.

அந்தியூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீட்டுவசதித்துறை அமைச்சர் சு முத்துச்சாமி 500க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில், கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்ற வீட்டு வசதித்துறை அமைச்சர் சு முத்துச்சாமி, தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் ஆலாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இயங்கிவரும் கைத்தறி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி போனஸ் வழங்கினார்.

மேலும், அந்தியூர் வருவாய்த்துறை சார்பில் 25 நபர்களுக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை ஆணையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்