புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம்

புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம்
X

ஏலத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள வாழைத்தார்.

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 3 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், எண்ணமங்கலம், ஜரத்தல், சென்னம்பட்டி, வெள்ளித்திருப்பூர், ஆப்பக்கூடல், அத்தாணி ஆகிய பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்து 676 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் கதலி (கிலோ) ரூ.26-க்கும், நேந்திரம் ரூ.23-க்கும் ஏலம் போனது. செவ்வாழை (தார்) ரூ.350-க்கும், தேன்வாழை ரூ.350 க்கும், ரொபஸ்டா ரூ.260-க்கும், மொந்தன் ரூ.200-க்கும், பூவன் ரூ.250-க்கும், ரஸ்தாளி ரூ.420-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் 3 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வாழைத்தார்களை ஏலம் எடுத்து சென்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil