புதுப்பாளையம் சொசைட்டியில் ரூ.2.60 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், வாழைப்பழம் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 2 ஆயிரத்து 170 வாழைத்தார்கள் வந்தன.

இதில் கதலி வாழைப்பழம் கிலோ ஒன்று 23 ரூபாய்க்கும், நேந்திரன் வாழைப்பழம் கிலோ ஒன்று 22 ரூபாய்க்கும் விற்பனை ஆகின. பூவன் (தார்) ரூ.200-க்கும், செவ்வாழை ரூ.330-க்கும், ரஸ்தாளி ரூ.470-க்கும், தேன்வாழை ரூ.380-க்கும், மொந்தன் ரூ.150-க்கும், ரொபஸ்டா ரூ.180-க்கும் ஏலம் போயின. வாழைப்பழத்தார் மொத்தம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்து 500 க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!