அந்தியூரில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு

அந்தியூரில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு
X

விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய எம்எல்ஏ வெங்கடாசலம். 

அந்தியூர் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் வகையில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அந்தியூர் தீயணைப்பு நிலைய இயக்குனர் ஜேசுராஜ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அந்தியூர் பர்கூர் ரோடு அந்தியூர் வார சந்தை தவிட்டுப்பாளையம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழாவில் அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!