அம்மாபேட்டையில் விவசாய விளைபொருட்கள் ரூ.7.20 லட்சத்துக்கு விற்பனை

அம்மாபேட்டையில் விவசாய விளைபொருட்கள் ரூ.7.20 லட்சத்துக்கு விற்பனை
X

பூதப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடம் . 

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்கள் ஏலம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 3 ஆயிரத்து 109 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இதில் சிறிய தேங்காய் ஒன்று 7 ரூபாய் 20 காசுக்கும், பெரிய தேங்காய் ஒன்று 15 ரூபாய் 50 காசுக்கும் என மொத்தம் 27 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய் 12 மூட்டைகள் ஏலத்துக்கு வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 869-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 589-க்கும் என மொத்தம் ரூ.14 ஆயிரத்து 55-க்கு விற்கப்பட்டது.

நிலக்கடலை 271 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 117-க்கும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 590-க்கும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 91 ஆயிரத்து 299-க்கு ஏலம் போனது. நெல் 26 மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இது குறைந்தபட்சமாக (குவிண்டால்) ரூ.1,577-க்கும், அதிகபட்சமாக ரூ.1,785-க்கும் என மொத்தம் ரூ.31 ஆயிரத்து 256-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மக்காச்சோளம் 13 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.1,849-க்கும், அதிகபட்சமாக ரூ.1,919-க்கும் என மொத்தம் ரூ.14 ஆயிரத்து 970-க்கு விற்பனையானது. எள் 13 மூட்டைகள் ஏலத்துக்கு வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 689-க்கும், அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 369 க்கும் என மொத்தம் ரூ.41 ஆயிரத்து 198-க்கு விற்பனையானது. மொத்த விவசாய விளைபொருட்கள் ரூ.7 லட்சத்து 20 ஆயித்து 418-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்