அந்தியூர் வாரச்சந்தை : கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட அதிகாரிகள்

அந்தியூர் வாரச்சந்தை : கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட அதிகாரிகள்
X
அந்தியூர் வாரச்சந்தையில் பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் திங்கள் தோறும் வார சந்தையானது கூடுவது வழக்கம். அதன்படி இன்று வாரச்சந்தை கூடியது. இந்நிலையில் அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாரச் சந்தைக்குள் கொரோனோ குறித்து விழிப்புணர்வு செய்தனர். அப்போது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பேசிய அதிகாரிகள், தற்போது மீண்டும் கொரோனோ அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது, எனவே பொதுமக்களிடையே விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்றும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து முக கவசம் வராச்சந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அணியாதவர்கள், கொரோனா விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture