அந்தியூரில் மழை காரணமாக மரம் விழுந்து 4 மணி நேரம் மின்தடை

அந்தியூரில் மழை காரணமாக மரம் விழுந்து 4 மணி நேரம் மின்தடை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமானது முதல் கனத்த மழை பெய்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமானது முதல் கனத்த மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 3 மணி அளவில் அந்தியூர் பவானி சாலையில் இருந்த மரம் கம்பத்தின் மீது விழுந்தது. இதில், அண்ணாமடுவு பவர் ஹவுஸில் இருந்து தவிட்டுபாளையம் பகுதிக்கு வரக்கூடிய பிரதான மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் தவுட்டுப்பாளையம் முழுவதும் 4 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதன்பிறகு மின்துறை ஊழியர்கள் அருந்த கம்பியை சரி செய்த பின்னர், இரவு 7 மணிக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!