அந்தியூர்: ரூ.3.88 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்
![அந்தியூர்: ரூ.3.88 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் அந்தியூர்: ரூ.3.88 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்](https://www.nativenews.in/h-upload/2022/01/10/1450764-img20220105131604.webp)
X
By - S.Gokulkrishnan, Reporter |10 Jan 2022 5:30 PM IST
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளின் விளைபொருள்கள் ரூ.3.88 லட்சத்துக்கு ஏலம் போயின.
அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள், 9,162 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில், குறைந்த விலையாக ரூ. 6.21-க்கும், அதிக விலையாக ரூ. 12.71-க்கும் என மொத்தம் ரூ.67,892-க்கு ஏலம் போனது. 79 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 75.09 முதல், ரூ.95.29 வரையில் மொத்தம் ரூ.2,65,008-க்கு விலை போனது.
2 மூட்டை எள் கிலோ ரூ. 95.69 என மொத்தம் ரூ. 11,016-க்கும், 80 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ.17.69 முதல் ரூ. 17.89 வரையில் மொத்தம் ரூ.44,372-க்கும் விற்பனையானது. மொத்தம் 117.59 குவிண்டால் வேளாண்மை விளைபொருட்கள், ரூ.3,88,288 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாகவும், 98 விவசாயிகள் பங்கேற்றதாகவும் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu