அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு
X

அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும் எம்எல்ஏ வெங்கடாச்சலம்.

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாச்சலம் அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாச்சலம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சமையலறை, வகுப்பறைகள், கட்டிடம், கழிப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதை தொடர்ந்து, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்தரம் குறித்தும் கேட்டறிந்தார். மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவற்காக வைக்கப்பட்டிருந்த சீரூடைகளைகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் பற்றி கேட்டறிந்து, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இந்த நிகழ்வின் போது, அத்தாணி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!