கொட்டும் மழையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம்

கொட்டும் மழையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம்
X

குருநாதபுரம் பகுதியில், கொட்டும் மழையில் நனைந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த, எம்.எல்.ஏ. வெங்கடாசலம்.  

கொட்டும் மழையில் வீடு வீடாகச் சென்று, அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சங்கராப்பாளையம் கிராம ஊராட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் குருசாமி, 297 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் நடராஜனை வீழ்த்தினார்.

இதையடுத்து, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம், நேற்று மாலை குருநாதபுரம், சங்கராப்பாளையம், குள்ளம்பாளையம், பாரதிநகர், ராஜீவ் நகர் வட்டக்காடு மற்றும் காக்காயனூர் ஆகிய கிராமங்களுக்குச் சென்று, கொட்டும் மழையில், திமுக ஆதரவு பெற்ற குருசாமியை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!