சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு

கோபி மற்றும் அந்தியூர் பகுதிகளில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் உள்ள மரகதீஸ்வரருக்கு இன்று மதியம் 12 மணி அளவில் பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சாதம் மற்றும் 75 கிலோ காய்கறிகள் இனிப்புகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில், கோபி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில், மாதேஸ்வரன் கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், மொடச்சூர் ஈஸ்வரன் கோவில் மற்றும் கோபி பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.

அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான செல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவலிங்கத்துக்கு பச்சரிசி அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கனிகளிலும், காய்களிலும் அலங்காரம் செய்யப்பட்டன. இதேபோல் அந்தியூர் அருகே அத்தாணி குப்பாண்டபாளையத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பச்சரிசி மூலம் சமைக்கப்பட்ட அன்னத்தால் சிவலிங்கத்துக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்