அந்தியூரில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

அந்தியூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர். 

அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூர் ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, மத்திய அரசைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், 273 ரூபாய் கூலியை, 600 ரூபாயாக உயர்த்த வேண்டும், 100 நாள் வேலை தொழிலாளிகளை பொது சொத்துக்களான ஏரி, குளம், குட்டைகளை ஆழப்படுத்த, தூர்வாருவதற்கு, சுத்தம் செய்வதற்கு அதிகம் பயன்படுத்த வேண்டும், தினசரி தொடர்ந்து அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுக்கா தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். விதொச மாவட்டத் தலைவர் விஜயராகவன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி. பி. பழனிச்சாமி, விதொச தாலுக்கா செயலாளர் எஸ். வி. மாரிமுத்து, சிபிஎம் தாலுக்கா செயலாளர் ஆர். முருகேசன், விதொச தாலுக்கா பொருளாளர் தியாகராஜன், பாலக்குட்டை சிபிஎம் கிளைச் செயலாளர் செங்கோடன் ஆகியோர் கோரிக்கைகளை வலிறுத்தி பேசினர். இதில், ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story