அந்தியூர் பேரூராட்சியில் 73 சதவீதம் வாக்குப்பதிவு

அந்தியூர் பேரூராட்சியில் 73 சதவீதம் வாக்குப்பதிவு
X

பைல் படம்

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அந்தியூர் பேரூராட்சியில் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 6 மையங்களில் 22 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மொத்தம் , 6 ஆயிரத்து 928 ஆண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 127 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 14 ஆயிரத்து 55 பேர் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர்.

அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 73 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!