வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து 166 கன அடி நீர் வெளியேற்றம்

வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து 166 கன அடி நீர் வெளியேற்றம்
X

வரட்டுப்பள்ளம் அணை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மிதமான மற்றும் ஒரு சில இடங்களில் கனத்த மழை பெய்தது.

அந்தியூர் அருகே உள்ள கல்லுப்பள்ளம், கும்பரவாணிபள்ளம் உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பி வழிகிறது. வரட்டுப்பள்ளம் அணைக்கு வரும் 166 கன அடி நீர் உபரி நீராக வினாடிக்கு 166 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த தண்ணீர் கெட்டிசமுத்திரம், அந்தியூர் ஏரி, சந்தியபாளையம் ஏரி , வேம்பத்தி ஏரிகளுக்கு செல்வதால் ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself