தினம் 1லிட் பாண்டிச்சேரி பிராந்தி வழங்கப்படும் : சுயேச்சை வேட்பாளர்

தினம் 1லிட் பாண்டிச்சேரி பிராந்தி வழங்கப்படும் : சுயேச்சை வேட்பாளர்
X
18 வயது நிரம்பிய அனைவருக்கும் தினம் ஒரு லிட்டர் பாண்டிச்சேரி பிராந்தி வழங்கப்படும் என்று குடிமகன்களை கவரும் விதமாக தேர்தல் அறிக்கையை வழங்கியுள்ளார் அந்தியூர் தேர்தல் மன்னன் சேகுதாவூத்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுபவர் ஷேக்தாவூத், இவர் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 9வது முறையாக சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். டைலர் தொழில் செய்து வரும் இவர், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் சுயேச்சையாக போட்டியிடுவதன் மூலம் அந்தியூரில் பிரபலமாகியுள்ளார். தனக்கென உதவியாளர் ஒருவரும் இன்றி தானே ஒரு டாடா ஏஸ் வாகனத்தில் அமர்ந்து கொண்டு தனிமனிதனாக கழுத்தில் மாலை மஞ்சள் கலர் சட்டையுடன் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து பிரபலமானவர் சேகுதாவூத்.

தற்போதைய சட்டமன்ற தேர்தலில் இவருக்கு சோபா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு பிரச்சாரத்தை துவங்கியவர் அந்தியூர் தொகுதி பொதுமக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து உள்ளார். அதன்படி, குடும்பத் தலைவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் மாத மாதம் வழங்கப்படும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஓப்போ செல் போன் வழங்கப்படும். 60வது வயது நிரம்பிய முதியோருக்கு மாதம் 10 ஆயிரம் வழங்கப்படும்,

சிறுதொழில் கடன் 10 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். அந்தியூரில் நிரந்தர பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும். 18 வயது நிரம்பிய ஆண்களுக்கு ஒரு லிட்டர் பாண்டிச்சேரி பிராந்தி தினசரி வழங்கப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தி ஜெயலலிதாவை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் உள்ளிட்ட 11 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து உள்ளார். மேலும் அவர் பேசும் பொழுது அதிமுக எம்எல்ஏக்களுக்கு உண்மை கண்டறியும் ஊசியைப் போட்டால் ஜெயலலிதாவை கொன்றவர்கள் யார் என்ற உண்மை நிச்சயம் தெரியவரும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!