அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
X

அந்தியூர் வாரச்சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட தக்காளி.

அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளியின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் 20 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை.

மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றான தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் தக்காளியை தவிர்த்து மற்ற காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நேற்று கூடிய வாரச்சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் இருபது ரூபாய் அதிகரித்து தக்காளி விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை பொருத்தவரையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!